
சிம்புவினால் அண்மையில் முன்னோட்டமாக வெளியிடப்பட்ட பாடல் Love Anthem for World Peace உலக சமாதானத்திற்காக என உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் காதல் எனும் சொல்லை கொண்டு சிம்புவினால் எழுதி இசையமைத்து பாடி முன்னோட்டமாக வெளியிட்டிருந்தது.
இதன் முழமையான இசை வெளியீட்டிற்கான இசைப்பதிவு நடைபெற்று வருகின்றது இந்த இசைத் தொகுப்பில் பல பிரபலங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது thuruvam வாசகர்கள் நீங்கள் அறிந்ததே.
தற்போதைய தகவலின் படி அமெரிக்க Los Angeles நகரத்தில் UMRK, Frank Zappa 's Studioவில் இசைப்பதிவு நடைபெற்று வருகின்றது நிளல் படத்தில் சிம்புவிற்கு அருகில் நிற்பவர் Elan Morrison மற்றும் உதவியாளர் Jared J Lee Gosselin
இவர்கள் பல புதுமுகங்களை வைத்து பல பிரபலமான இசைத் தொகுப்புக்களை வெளியிட்டவர்கள் இதில் Velvet Revolver , Dr. Dre , Slash, Sean Combs , Tony Braxton , Macy Gray , Kanye, Bobby Brown , Booker T, Bones, Seal and Slayer போன்றவர்களை வைத்து இசைத தொகுப்புக்களை வெளியிட்டிருந்தார்கள்.
சிம்பு இசைத் தொகுப்புப் பற்றி குறிப்பிடுகையில் இவர்களுடன் இணைந்து ஒரு உலகத் தரம் வாய்ந்த இசைத் தொகுப்பை வழங்குவோம் என்ற நம்பிக்கை உண்டு என குறிப்பிட்டார்.
இசை ரசிகர்களும், சிம்புவின் ரசிகர்களும் இது போன்ற ஒரு உலகத் தரம் வாய்ந்த இசைத் தொகுப்பை வெளியிடுவதில் பொருமை கொள்வதில் எந்த ஐய்யமும் இல்லை.
0 comments:
Post a Comment