
எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் ஜெய்யும் அஞ்சலி பாடிய காதல் டூயட்டுகள் ரொம்பவே தத்ரூபமாக இருந்தது. நிஜமான காதல் சிட்டுகள் போலவே இருவரும் (நடித்து) இருந்தனர்! அதை பார்த்து, இருவருக்கும் கெமிஸ்ட்ரி நூற்றுக்கு நூறு என பலர் சபாஷ் போட மற்றொரு பக்கம் இருவருக்கும் நிஜமாவே லவ் பா, அதான் இவ்வளவு நேச்சுரல் கெமிஸ்ட்ரி என சிலர் கொளுத்திப் போட்டனர். அப்புறம் என அவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் டும் டும் டும் என்றும் தீயை விட வேகமாக பரவியது சேதி.
அலறி அடித்துக் கொண்டு ஜெய்யும் - அஞ்சலியும் மாறி மாறி பத்திரிகைகளில் பேட்டியளித்தனர். ஒரு சினிமாக்காரிய நான் கல்யாணம் கட்ட மாட்டேன் என ஜெய்யும், இனிமேல் என் ஆயுள் முழுதுக்கும் ஜெய்யுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என அஞ்சலியும் அறிக்கைகளை பறக்க விட்டனர். சரி அவ்வளவு தான் என்று நினைத்தால் இப்போது அம்மணி வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஜெய்யுடன் மீண்டும் ஜோடி சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அசிஸ்டென்ட் மஞ்சுநாத், எங்கேயும் எப்போதும் படத்தைப் பார்த்து விட்டு ஜெய் - அஞ்சலிக்கு அப்படி ஒரு கெமிஸ்ட்ரி என அசந்து போய் தனது அடுத்த படத்தில் அவர்கள் தான் நடிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்று விரதம் மேற்கொண்டுள்ளாராம். விளைவு! தயக்கத்தை தகர்த்து அஞ்சலியும் ஓகே சொல்லிவிட்டாராம்!
அப்போ அந்நிக்கு நீங்க சொன்னது என்னாச்சு அஞ்சலி மேடம்....!?
0 comments:
Post a Comment