Monday, January 09, 2012

காலிசுக்கு ஓய்வு, பெர்த் சவால், மார்ஷ் தயார்


இலங்கையுடன் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் (5 போட்டிகள்) இருந்து தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் விலகியுள்ளார். 2015 உலக கோப்பை போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ள காலிஸ் (6வது மற்றும் கடைசி முறை), அதற்கு முன்பாக முக்கியமான தொடர்களில் மட்டுமே களமிறங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பெர்த் சவால்

‘மூன்றாவது டெஸ்ட் நடக்க உள்ள பெர்த் மைதான ஆடுகளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். பந்து அதிவேகமாகவும், நன்றாக எழும்பியும் வரும் என்பதால் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது’ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் காலிங்வுட் தெரிவித்துள்ளார்.

மார்ஷ் தயார்

வயிற்றுக் கோளாறால் அவதிப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ், பெர்த் மைதானத்தில் வெள்ளியன்று தொடங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 டெஸ்டிலும் அவர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க கேப்டன் கிளார்க் உறுதியுடன் உள்ளார்.

0 comments:

Post a Comment