Monday, January 09, 2012

"பெர்த் ஆடுகளம் இருந்ததை விட "20 சதவீதம்" பவுன்ஸ்


 "பெர்த் ஆடுகளம் கடந்த முறை இருந்ததை விட 20 சதவீதம் அதிகம் "பவுன்ஸ்' ஆகும்'' என இப்போதே மிரட்டியுள்ளார் ஆடுகள தயாரிப்பாளர் காமிரான் சுதர்லாந்து.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிஇ முதல் இரு டெஸ்டில் தோல்வியடைந்துஇ 0-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட்இ வரும் 13ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.
கடந்த முறை இந்திய அணி இங்கு பங்கேற்ற போட்டியில்இ 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால்இ இம்முறை ஆடுகளத்தில் சில மாற்றங்கள் செய்துஇ அதிகளவில் பந்துகள் எகிறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தவிரஇ கேப்டன் மைக்கேல் கிளார்க்கும்இ நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து காமிரான் சுதர்லாந்து கூறியது:
 இந்திய அணி கடந்த 2007-08ல் இங்கு டெஸ்டில் பங்கேற்ற போது இருந்ததை விடஇ 20 சதவீதம் கூடுதலாக பந்துகள் "பவுன்ஸ்' ஆகும். இதனால் தான்இ கடந்த ஆண்டு இங்கு நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்சில் 187இ 123 ரன்களுக்கு சுருண்டுஇ 267 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின் போது இருந்த ஆடுகளத்தை போலவே இப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆடுகளத்தை தன்மையை மாற்றி வருகிறோம். புற்களின் அமைப்பையும் மாற்றியுள்ளோம். அதேநேரம் எப்போதும் கடினமாக இருக்காது. ஆடுகளத்தில் வெடிப்புகள் ஏற்படாது. மொத்தத்தில் கடந்த 1970-80களில் ஆடுகளம் இருந்ததைப் போன்ற பாரம்பரியத்தை கொண்டு வந்துள்ளோம்.
இந்திய பேட்ஸ்மேன்கள்இ வேகப்பந்து வீச்சில் திணறுகின்றனர். இதனால்இ ஆஸ்திரேலிய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது தவறான முடிவாக இருக்காது.
இவ்வாறு காமிரான் சுதர்லாந்து கூறினார்.

"டுவிட்டருக்கு' தடை
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்கள் "டுவிட்டர்' இணையதளத்தில் செய்தி வெளியிட தடை விதிக்கப்பட்டது. சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட "விரல்' சர்ச்சையின் போதுஇ "டுவிட்டர்' இணையதளத்தில் கோஹ்லி தனது கருத்துக்களை வெளிப்படையாக குறிப்பிட்டார். இதனால் ஏற்படும் தேவையில்லாத பிரச்னையை தவிர்க்கவேஇ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.




0 comments:

Post a Comment