Monday, January 09, 2012

புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன்விழா


(பாத்திமா ரினோஸா) 
புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன்விழா பெப்ரவரி 01ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. பொன் விழாவை கொண்டாடும் முகமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் திறந்த போட்டி நிகழ்ச்சி மற்றும் பொன் விழா மலருக்காக பாத்திமாவின் சாதனையாளர்கள் என்ற தகவலும் திரட்டப்படுகின்றன.

திறந்த போட்டி நிகழ்ச்சியில் கட்டுரை, கவிதை, சித்திரம் ஆகிய போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. பெண்களின் கல்வி விருத்தியில் பாத்திமா வித்தியாலயத்தின் பங்களிப்புகள் (1500 - 2000 சொற்கள்) என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், பெண்களின் முன்னோடி பாத்திமா வித்தியாலயம் (50 வரிகள்) என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், சவால்களை சமாளிக்கும் பாத்திமாவின் சாதனைகள் என்ற கருப் பொருளில் சித்திரப் போட்டியும் நடைபெறவுள்ளது.

போட்டிக்கான ஆக்கங்களை இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்பு பொன்விழா நிர்வாகக் குழு, பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், போல்ஸ் வீதி, புத்தளம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பிரிவிற்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைக ளுக்கிடையே அறிவுக்களஞ்சிய போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்காக பாத்திமாவின் சாதனையாளர்கள் என்ற விபரம் திரட்டப்ப டுகின்றது. பாத்திமாவின் பழைய மாணவர்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக பாத்திமாவின் சாதனையாளர்கள் பக்கம் இணைக்கப்பட்டுள்ளது. பெயர், துறை, பதவி, நிறுவனம், பாடசாலையிலிருந்து வெளியாகிய வருடம் போன்ற விபரங்களை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்பு தபால் மூலமோ fathimabmv.puttalam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 01 முதல் 05ஆம் திகதி வரை புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

0 comments:

Post a Comment