Monday, January 09, 2012

அக்கரைப்பற்று பாடசாலை ஒன்றில் லஞ்சம் அறவீடு


(நமது செய்தியாளர்) 
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில், அக்கரைப்பற்று கோட்டத்தில் அமைந்துள்ள பிரபல்யமிக்க பாடசாலை ஒன்றில் மாணவர்களை தரம் ஒன்றில் சேர்ப்பதற்கு பணம் அறவிடுகின்றார்கள் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இலவசக் கல்வியின் இலக்கை நோகடிக்கச் செய்யும் பாடசாலையின் நிருவாகிகள் எந்தவிதமான சிட்டைகளும் வழங்காது பெற்றோர்களிடமிருந்து கூடிய தொகையாக ரூ.5000.00உம், குறைவான தொகையாக ரூ.2000.00உம் தரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர்.

மாநகரத்தின் மத்தியில் பெரிய பாடசாலையாக போற்றப்படும் இங்கு, அதுவும் கற்றவர்கள் அதிகம் இருக்கின்ற இப்பிராந்தியத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதானது ஏழைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கல்வியின் நிழலைக்கூட பெறமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் பிள்ளையின் பெற்றார் விபரிக்கையில், பாடசாலையின் அதிபர் இவ்விடயத்தில் சம்பந்தப்படாது பிரதியதிபரே சம்பந்தப்படுகின்றார். கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டபோது, தரமுடியாது பணத்தைத் தந்தால் சரி நீங்கள் போகலாம் என்று கூறினார். என்ன செய்வது தனது பிள்ளையின் கற்றலுக்காக வேண்டி பணத்தைக் கொடுத்ததாகவும், பல ஏழைப் பெற்றோர்கள் மிகவும் உளம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் கூறுகின்றார். 

அண்மைக்காலமாக கல்வியில் ஊழல் நடைபெறுகின்றது என்கிற அறிவித்தல்களுக்கும் மத்தியில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்தகாதும். அதேவேளை பாடசாலைகளை அபிவிருத்தி செய்கின்ற பணியில் பல்வேறு பெயர்களுடன் திட்டங்கள் நடைபெற்று வருகின்ற இக்கால கட்டத்தில், மாணவர்களுக்கு உபகரனங்கள் கொள்ளவனவு செய்வதற்காக தர உள்ளீடுகள் கொள்வனவுக்கு அரசினால் பணம் வழங்கப்படுகின்றபோதும் இவ்வாறான செயல்களை செய்வது மிகவும் வருந்தத்தக்கதான விடயமாகும் என பிள்ளையின் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment