Wednesday, January 04, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தென்னாபிரிக்கா விஜயம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது. ஆளும் கட்சியான தென்னாபிரிக்க காங்கிரஸின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று இத்தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.

இரா. சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி அளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment