Wednesday, January 04, 2012

தனுஷுடனான சர்ச்சைக்கு ஸ்ருதி ஹாசன் பதில்


நடிகர் தனுஷூம், ஸ்ருதி ஹாசனும் நெருங்கி பழகுவதாக வந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தனுஷூடன் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படம் வெளிவருவதற்கு முன்பே 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறி பாடல் தனுஷை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷூம், ஸ்ருதி ஹாசனும் ரொம்பவே நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் நடிகர் ரஜினி கோபமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை பற்றி கேள்விப்பட்ட ஸ்ருதி மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் ஸ்ருதிஹாசன் கூறுகையில், இந்த தகவல் முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது. தனுஷ் என்னுடன் நடிக்கும் சக நடிகர், ஐஸ்வர்யா எனது நெருங்கிய தோழி. இப்படிப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் வேதனைப்படுத்தும்.

புத்தாண்டு அன்று நான் என் தாயாருடன் கோவாவில் இருந்தேன். சினிமா நட்சத்திரம் என்றாலே வதந்திகளுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்று கூறினார்.

0 comments:

Post a Comment