அக்கரைப்பற்று-பொத்துவில் வீதியில் அமைந்துள்ள டிப்போ பள்ளி முன்னால் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடந்த குண்டு வெடித்ததில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார். மற்றவர் காயங்களுக்கு உட்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பந்து போன்ற ஒரு பொருளைக் கண்டு அதனை எடுத்து விளையாடும்போது அது வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில் முகமட் அலியார் நிலாஸ் (வயது 10) என்ற சிறுவன் உயிரிழந்ததுடன், ஆதம்லெப்பை முகமட் இஸ்மத் (வயது 16) என்ற சிறுவன் காயமடைந்து அக்கரைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில காலங்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்திருக்கலாமெனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஆயுதக் குழுக்களால் சில காலங்களுக்கு முன் வெற்றுக் காணியொன்றில் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டொன்றை சிறுவர்கள் பந்தென எண்ணி எறிந்து விளையாடியபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

0 comments:
Post a Comment