
ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் திருமணமான 15 வயது சிறுமியை கடந்த ஆறு மாதமாக அவளது கணவன், அவனது தாயார், சகோதரி துன்புறுத்தினர். சிறுமியின் தலைமுடி வெட்டியுள்ளனர். கை விரல்களில் உள்ள நகத்தை பிடுங்கியுள்ளனர். நன்கு காய்ச்சிய கம்பியால் வைத்து சூடும் வைத்தும் துன்புறுத்தினர். பொலிஸார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தகவல் வெளியானதும் ஆப்கான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமியை துன்புறுத்தியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்வர் என்றும் கூறினார்.
இந்நிலையில் ஆப்கான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சிறுமியை துன்புறுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கணவனை தேடி வருவதாகவும் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியை மேல் சிகிச்சைக்காக இந்தியா அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment