Monday, January 09, 2012

நுவரெலியாவில் கடத்தப்பட்ட வாகனம் யாழில் கண்டுபிடிப்பு


நுவரெலியாவில் வாகன சாரதியின் கழுத்து வெட்டப்பட்டு கடத்தப்பட்ட வாகனம் யாழ்ப்பாணம் கோப்பாய், நீர்வேலி கராஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4ஆம் திகதி காலை சாரதியின் கழுத்து வெட்டப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கொலை, கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை தேடும் பணியில் நுவரெலியா விசேட பொலிஸ் குழு ஈடுபட்டது. இதன்போது கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து யாழ்ப்பாண பொலிசார் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தை அடையாளம் காட்டுவதற் காகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காகவும் வெள்ளவத்தையைச் சேர்ந்த வாகன உரிமையாளரும், நுவ ரெலிய விசேட பொலிஸ் குழுவினரும் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட சாரதி கமல ராஜ்ஜின் இறுதிக் கிரியைகள் தம்பிலு வில்லில் நடைபெற்றது. கொலை செய்யப்பட்ட சாரதியின் நண்பர்கள் சிலரும் யாழ்ப்பாணத்தில் வாகனத்தை கண்டதாக வாகன உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment