உரும்பிராய் தெற்கில் உள்ள அகதி முகாமொன்றில் இரவு படுக்கைக்கு போனவர் அடுத்தநாள் காலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தம்பு சத்திலிங்கம் (வயது 44) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த நபர் சனிக்கிழமை இரவு உணவை உட்கொண்டு விட்டு படுக்கைக்கு சென்றார். எனினும் அவரை அதிகாலையில் இருந்து காணவில்லை. அவரின் மனைவியும்,பிள்ளையும் அவரைத் தேடிய போது அவர்களின் வசிப்பிடத்துக்கு பின்புறமாக உள்ள பலாமரத்தில் 20 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். மரண விசாரணைகளை பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு மேற்கொண்டார். மரணவிசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்றியல் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்தவர் மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து, உரும்பிராய் அகதிமுகாமில் வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment