Wednesday, January 04, 2012

கோபாலபுரம் வறிய மாணவர்களுக்கு பியசேன எம்.பி. உதவி


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் வசித்துவரும் கோபாலபுரம் கிராமத்திலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவருமான பீ.எச். பியசேன அவர்களின் சொந்த நிதியிலிருந்து பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று கோபாலபுரம் பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம்.ஐ.எம். றியாஸ் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment