Tuesday, January 03, 2012

போலி டொலர்களை சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை


(கலாநெஞ்சன்) 
சிங்கப்பூருக்கு போலி டொலர்களை கொண்டுசெல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 10 வருடகாலம் ஒத்திவைத்த இரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் விதித்தார்.

தம்புல்ல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டவராவார். பிரதிவாதி நீதிமன்றில் குற்றத்தை ஏற்றுக்கொண்டார். 
2008 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பிரதிவாதி ஒரே இலக்கம் கொண்ட 20 போலி டொலர் நோட்டுக்களை சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment