சென்னையில் நடைபெற்று வரும் கொலவெறி டி பாடல் காட்சிகளுக்கான சூட்டிங்கில் நடிகர் தனுஷூம், நடிகை ஸ்ருதியும் ஆட்டம் போட்டு வருகிறார்கள். 3 படத்திற்காக நடிகர் தனுஷ் எழுதி, பாடியிருக்கும் கொலவெறி டி பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டது. இந்த பாடலுக்கான காட்சிகளை படமாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், இந்த பாடல் காட்சிகள் படமாகி வருகின்றன.
இதில் படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் நாயகி ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்கேற்று ஆடுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய சூட்டிங், தொடர்ந்து நடந்து வருகிறது. கொலவெறிடி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் பாடலுக்கான காட்சிகளை மிகவும் கவனமாக, ரசிகர்களை மேலும் மேலும் ஈர்க்கும் வகையில் படமாக்கி வருவதாக கூறியிருக்கிறார் டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ்.

0 comments:
Post a Comment