
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. கிளார்க், ஹசி இருவரும் தொடர்ந்து தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹசி தனது 16ஆவது சர்வதேச தசம் அடித்தார். மறுமுனையில் தனது அசத்தலை தொடர்ந்த கேப்டன் கிளார்க், முதன் முதலாக ட்ரிபிள் சதம் அடித்து சாதித்தார். அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கிளார்க் (329), ஹசி (150) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்னிங்ஸ் மற்றும் 468 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. சேவக் (4) இம்முறையும் கைவிட்டார். டிராவிட் (29) போல்டானார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. கம்பிர் (68), சச்சின் (8) அவுட்டாகாமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், இன்னிங்ஸ், 354 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி.
0 comments:
Post a Comment