Sunday, January 08, 2012

அழகான கதாநாயகர்களை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துங்கள்


அழகான கதாநாயகர்களை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை சுஹாசினி.
நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ள பனிதுளி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகை சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் சுஹாசினி கூறுகையில்,  நான் ஒரு நடிகையாகவோ அல்லது சினிமா சார்ந்தவராக இல்லாமல் ஒரு சாதரண பெண்ணாக, ஒரு ரசிகையாக ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அழகான நடிகையை மட்டும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

கதாநாயகர்கள் அழகாக உள்ளனரா என்று எவரும் பார்ப்பதில்லை.  நடிகர்கள் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற அழகான கதாநாயகர்களை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார்.

0 comments:

Post a Comment