(செங்கதிரான்)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முறைகேடான முடிவுகள் தொடர்பில், நாளை பரீட்சைகள் ஆணையாளரிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்துள்ள ஐவரடங்கிய குழு விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தக்குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடி விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், அதனடிப்படையில் நாளை பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவிடம் விளக்கத்தை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் கணணி தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பிழையாக பதிவு செய்யப்பட்டதாக, முன்னர் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், தகுதிவாய்ந்த பணியாளர்கள் இல்லைமை காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையிலேயே பரீட்சைகள் ஆணையாளரிடம் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது விசாரணை அறிக்கையை இரண்டு வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment