Sunday, January 01, 2012

மருதமுனையில் வீடு வழங்குமாறு கோரி மக்கள் ஆர்பாட்டம்


(பி.எம்.எம்.ஏ. காதர், சம்யா)
மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 178 குடும்பங்களுக்கு மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்குமாறுகோரி கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆர்பாட்டமொன்றை மேற்கொண்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 178 குடும்பங்களுக்கு இன்று 7 வருடங்களாகியும் குடியிருப்புக்கள் வழங்கப்படவில்லை. மேட்டுவட்டை பிரதேசத்தில் அரசால் அமைக்கப்பட்ட வீடுகள் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அமைக்கப்பட்ட வீடுகளில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

கடந்த 7 வருடங்களாக குடியிருப்பு இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளை உடனடியாக பெற்றுத் தருமாறு கோரியே கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரதேச செயலாளர் எம்.எம்.நவ்பல் மக்கள் பிரச்சினை தொடர்பில் அரசாங்க அதிபரின் கவத்திற்கு கொண்டு வந்ததன் பின், இரு வாரங்களுக்குள் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார். அரசாங்க அதிபரின் இந்த உத்தரவாதத்தை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். 



0 comments:

Post a Comment