இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 8 ரூபாவினாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஏற்கனவே எமது "துருவம்" இணையத்தளத்தில் பெற்றோலின் விலை அதிகரிக்கக்கூடும் என 18.10.2011 அன்று செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:
Post a Comment