நடிகை நிக்கோலை, வைக்கோல்போல வந்த வேகத்திலேயே சுருட்டி எறிந்துவிட்டது தமிழ் சினிமா. அவரை தேடிப்பிடித்து மீண்டும் வாய்ப்பு கொடுத்த டைரக்டர் ராஜ்கிருஷ்ணாவுக்கு ஒரே மண்டை குடைச்சல். தற்போது ஒரு "நடிகையின் வாக்குமூலம்" என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இவர். இதில்தான் நடிகையாகவே நடிக்கிறார் நிகோல்.
சென்னையில் இப்படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் இவருக்காக ஒரு காஸ்ட்யூம் கொடுத்தார்களாம். இது சரியாக இல்லை. மும்பையிலிருந்து வரவழைங்க என்றாராம் அவர். அதற்கு சம்மதிக்கவில்லை டைரக்டர். உடனே கோபித்துக் கொண்டு அறைக்குள் போனவர், அப்புறம் வெளியேவர ஆயிரம் கண்டிஷன் போட்டாராம். மொத்த சம்பளத்தையும் எண்ணி வச்சதான் வெளியே வருவேன் என்று அவர் அடம்பிடிக்க, படப்பிடிப்பு முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருக்கு. அதுக்குள்ளே கேட்டா எப்படி தருவதாம் என்று பட நிறுவனம் கேட்க, ஒரே காச்சு மூச்சு.
படப்பிடிப்பை பாதியிலேயே விட்டு விட்டு மும்பைக்கு போய்விட்டாராம் நிக்கோல். நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று நிகோலும், கோர்ட்டுக்கு போவேன் என்று ராஜ்கிருஷ்ணாவும் பல்லை கடித்துக் கொண்டிருக்கிறார்கள். எரிக்கறதுக்கு விறகு இல்லேன்னு இடது கையவா அடுப்புல விடுவது? புக் பண்ணும்போதே இன்னும் நாலுபேரை யோசித்திருக்கலாமே என்று அட்வைஸ் செய்கிறார்களாம் ஆளாளுக்கு. நொறுங்கிப் போயிருக்கிறார் ராஜ்கிருஷ்ணா.

0 comments:
Post a Comment