குருநாகல்- தம்புள்ள வீதியில் இன்று பி.ப. 2.50 மணியளவில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதியதில் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொகரல்ல, பொல்கொல்ல வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 15 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்ற பஸ் ஒன்று கதுருவெலயிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்
கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்ற பஸ் ஒன்று கதுருவெலயிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:
Post a Comment