அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்து வெளியாகிய படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமான இப்படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், அன்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் 31 ஆகஸ்ட் 2011 அன்று திரைக்கு வெளியானது.
மங்காத்தா படத்தின் வெற்றி, எங்களை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அஜித் பொது விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருவது அனைவரும் தெரிந்த ஒன்று. இதனால் மங்காத்தா படத்தின் 100ஆவது நாள் விழாவில் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகமே.
படத்தின் கதாநாயகன் கலந்துக் கொள்ளாமல், இப்படியொரு விழா நடத்தினாலும் நன்றாக இருக்காது. மேலும், தற்போது மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜித் பில்லா-2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். மங்காத்தா படத்தின் 100ஆவது நாள் வெற்றிவிழா கொண்டாடும் எண்ணம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment