Friday, November 25, 2011

சம்மாந்துறை பொலிஸ் கரப்பந்தாட்டப் போட்டி


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சினேகபூர்வ கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மூன்று அணிகள் பங்கு கொண்டது அதாவது நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை யுனிட்டி முபோவிளையாட்டுக் கழகம், சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகம்; என்பன கலந்து கொண்டது.

இவ் அணிகளில் இறுதிப்போட்டிக்கு சம்மாந்துறை யுனிட்டி முபோவிளையாட்டுக் கழகம் மற்றும் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டு சம்பியன் விருதை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் தமதாக்கிக் கொண்டது.

வேற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணத்தை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க வழங்கி வைப்பதையும் அருகில் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி அமீர், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சப்ரி நசார் உட்படபலர் கலந்து கொண்டிருப்பதையும் காணலாம்.





0 comments:

Post a Comment