(கலாநெஞ்சன்)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் 66 ஆவது பிறந்த தினத்தையிட்டும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமானதையிட்டும் நீர்கொழும்பு மாநகர சபையினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மேயர் அன்ரனி ஜயவீர தலைமையில், இன்று முற்பகல் 10 மணியளவில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் 1000 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






0 comments:
Post a Comment