Saturday, November 26, 2011

மழையில் நிரம்பும் வவுனியா குளங்கள்

(வவுனியாவிலிருந்து பிறவ்ஸ்) 
தற்போது ஒரு வாரமாக வடக்கில் பெய்துவரும் அடை மழையினால் வவுனியா விலுள்ள பல குளங்கள் நீரினால் நிரம்பியுள்ளன. இக்குளங்கள் மாரிகாலத்தின்போது நிலம் தெரியுமளவிற்கு வறண்டு கிடந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களது விவசாய நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது வயல்களில் விதைத்துள்ள நிலையில் இவ்வாறு வெள்ளம் வந்துள்ளதனாலும், குளங்கள் நிரம்பி வழிவதாலும் தங்களது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.

தற்பொழுது ஒரு வாரத்திற்கு மேலாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அடைமழை பெய்வதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கீழுள்ள படங்களில் வவுனியாவிலுள்ள வேப்பங்குளம் நீரில் நிரம்பியுள்ளதாக் காணலாம்.






0 comments:

Post a Comment