மலையாளப்பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்திலும் மாதவனுடன் குரு என் ஆளு படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது அருண் விஜய்க்கு ஜோடியாக தடையற தாக்க படத்திலும் நடித்து வருகிறார். மம்தா புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகியுள்ளார். இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. சிறு வயது முதலே பழக்கமான தூரத்து உறவினரை மணக்க இருக்கிறார்.
திருமண நிச்சயதார்த்தம் வருகிற 11ஆம் திகதி கொச்சியில் நடக்கிறது. இதற்காக நெருங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளாராம் நடிகை மம்தா.


0 comments:
Post a Comment