Tuesday, November 08, 2011

2012 ஒலிம்பிக்கில் தீபிகா படுகோனே


2012இல் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தீபிகா படுகோனேவை அணுகியது இந்திய விளையாட்டு மேம்பாட்டு திணைக்களம். அதற்க்கு பதிலளித்த தீபிகா, "நான் எப்போதும் விளையாட்டை நேசிப்பவள், விளையாட்டுதான் என் முதல் காதல், நான் செய்யும் செயல் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக இருந்தால் முழு மனதுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

மேலும், அவர் முன்னால் பூப்பந்தாட்ட வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே, அவர் ஒரு நாளில் பூப்பந்தாட வீராங்கனைதான். தீபிகா விளையாட்டு துறையில் மிகவும் பற்றுள்ளவர், அதனால்தான் நாங்கள் ஒவ்வொரு முறையும் அவரை தேர்வு செய்கிறோம் என்கிறது விளையாட்டு மேம்பாட்டு திணைக்களம்.

குறிப்பாக பூப்பந்தாட்ட விளையாட்டிற்கு என பிரபலங்கள் தேவை, அதற்கும் அவரை அணுகினோம், ஏனென்றால் அவர் ஒரு இளம் சாதனையாளர் சிறு வயதில் நிறைய சாதித்தவர். இதுபோல் அனைவரும் முன்வந்து வீரர்களை ஊக்கபடுத்தினால் அது மிகவும் வரவேற்க்கத்தக்க விஷயம், நம் நாட்டில் நிறைய வீரர்கள் சாதிக்க துடிக்கிறார்கள். ஒவ்வொரு பிரபலங்களும் இதை செய்தால் நன்றாக இருக்கும்.


0 comments:

Post a Comment