Monday, November 14, 2011

பாராட்டுவிழா மேடை இடிந்து விழுந்தது

(கே.எல். அமீர்)  
ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பி.ப. 2.45 மணியளவில் அதிதிகள் மற்றும் மாணவர்கள் வீற்றிருந்த மேடை இடிந்து விழுந்துள்ளது. இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த துரதிர்ஷ்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிதிகளுடன் சேர்ந்த புகைப்படம் எடுப்பதற்காக மேடையில் ஏறியபொழுது திடீரென விழா மேடை இடிந்த விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாரியளவிலனா பாதிப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு விழாவுக்கு மேடை அமைக்கும்போது அதன் உறுதித் தன்மையை சரிபார்க்காமல் விட்டது யார் செய்த தவறு...?




0 comments:

Post a Comment