Friday, November 11, 2011

தனியார் பஸ்கள் 15ஆம் திகதி போராட்டம்


(பஹமுன அஸாம்)  
எதிர்வரும் 15ஆம் திகதி தனியார் பஸ்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. டீசலின் விலையை 76 ரூபாவுக்கு தருமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்டுள்ளார்கள். அதன்படி டீசல் தராத பட்சத்தில் 15ஆம் திகதி அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ண தெரிவித்துள்ளார்.

இதனை மக்களுக்கும் பஸ் உரிமையாளர்களுக்‌கும் அறிவிப்பதற்காக துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன் ஆங்காங்கே போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. டீசல் விலை அதிகரிக்கப்பட்டவுடனேயே தமக்கு மானிய அடிப்படையிலோ அல்லது பழைய விலையிலோ டீசலைப் பெற்றுத்தரும்படி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தபோதும் நேற்றுவரை அரசாங்கம் அதற்கு எந்தவிதமான பதிலையும் முன்வைக்காததினாலேயே இம்முடிவுக்கு வந்ததாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் பஸ்கள் அரசுக்கு காலக்கெடு

0 comments:

Post a Comment