Monday, November 28, 2011

உதுல் பிரேமரத்னவுக்கு கைதிகளைப் பார்வையிட அனுமதி மறுப்பு


(பஹமுன அஸாம்) 
நேற்றைய தினம் அநுராதபுர சிறைச்சாலையில் தாக்கப்பட்ட சிறைக் கைதிகளை நேரில் பார்வையிடச் சென்ற "நாம் இலங்கையர் அமைப்பின்" நிறைவேற்றுக்குழு உறுப்பினர் உதுல் பிரேமரத்ன, சட்டத்தரணி டபிள்யூ.பி. சிற்றம்பலம் உட்பட்ட குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எவ்வாறான குற்றத்தையும் செய்தவர்களை பார்வையிட வழக்கறிஞர்களுக்கு அனுமதி உள்ளபோதும் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று பி.ப. 2.30 மணியளவில் அநுராதபும் சிறைச்சாலையில் உள்ளே பார்வையிடுவதற்கான அனைத்து ஆவணங்களையும் கொடுத்தபோதும் பி.ப. 3.30 மணியளவில் "மேலிடத்து உத்தரவு" என்று சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று உதுல் பிரேமரத்ன எமது 'துருவம்' இணையத்தளத்துக்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரி தலைமையிலான குழுவினர் கைதிகளின் உடைகளை களைந்து எரித்ததுடன் அவர்கள் மீது இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சைபெற்று வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment