Wednesday, November 09, 2011

வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று


அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தையும், தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் பெற்ற எம்.ஐ.எம். மிப்றான் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாஹிம் மற்றும் பாடசாலை அதிபர் வீ.ரி.எம். ஹனீபா மௌலவி ஆகியோர் சாதனை வீரர் மிப்றானுக்கு சான்றிதல் மற்றும் பதக்கம் அணிவித்தனர்.

பிரதி அதிபர் எம்.சி.சரீனா உம்மா, உதவி அதிபர்களான ஏ.எல் அப்துல் பத்தாஹ், எஸ்.எல்.எம்.நஸீர், பிரதி அதிபர் ஏ.சி. ஹரிஸ், சிரேஸ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஏ. அபாஜூல்பான், வலயத் தலைவர் யூ.எல். ஸ்திகின், உதவி வலயத் தலைவர் எம்.ஜாபீர், இளைஞர் சேவை அதிகாரி யு.எல்.ஏ. மஜீட், உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.ஜி பிர்னாஸ், எம்.ஐ. சிமாலைன், எம்.எம். அஸ்மி ஆகியோர் ஏனைய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிவித்தனர்.

 












அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எம்.அறூஸ்

0 comments:

Post a Comment