(கலாநெஞ்சன்)
அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதியின் பின்னர் 2015இல் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரியவருகிறது.
2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலத்திற்காக சத்தியப் பிரமாணம் செய்ததன் பின்னர் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சத்தியப் பிரமாணத்தின் 4 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான அறிவித்தலை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரும் அபிவிருத்தி திட்டங்கள் பல 2014இல் நிறைவடையவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலைநடத்துவதற்கு பொருத்தமான காலம் 2014ஆம் வருடமென்று அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 comments:
Post a Comment