(எஸ்.எல். மன்சூர்)
இவ்வாண்டின் இறுதியில் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான பரீட்சை மதிப்பீடுகள் பாடசாலை மட்டத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை வலயக்கல்வி அலுவலகங்கள் செய்து வருகின்றன. தரம் 6க்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கான பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றன எனவும், தரம் 5க்கு கீழ்பட்ட வகுப்புக்களுக்கான பரீட்சை மதிப்பீடுகள் எதிர்வரும் 28ஆம்திகதி ஆரம்பமாகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பரீட்சைகளின் ஊடாக மாணவர்களின் அடைவு மட்டங்கள் பரீட்சிக்கப்பட்டு வகுப்பேற்றங்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன் எதிர்வரும்; டிசம்பர் மாத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து க.பொ.த. சாதாரணதர பரீட்சையும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment