(கலாநெஞ்சன்)
பகிடிவதை நடவடிக்கையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித்தகைமை நீக்கப்படுவதுடன் சுமார் மூன்று வருட காலத்திற்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் கடந்த முப்பது வருடகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும், தென்பகுதியிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஜே.வி.பி. யின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்ததாகவும், இதன்போது அநாவசிய அரசியல் தலையீடுகள் காணப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்களில் தற்போது சுமுக நிலை காணப்படுகிறது. பேராதனை , மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களிலேயே பகிடி வதை அதிகரித்து காணப்படுகிறது. இதனை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்படுகிறது. ஆயினும் தற்போது 99 சதவீதம் பகிடிவதை குறைந்துள்ளது. பகிடிவதையை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment