(எஸ்.எல். மன்சூர்)
இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மேம்பட்டுக் காணப்பவதாக அரசு அறிக்கையொன்றில் கூறுகிறது. உண்மையில் இலங்கை ஜனாதிபதி அவர்களின் ஈ ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் நாட்டின் பட்டிதொட்டி எங்கும் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது மிகவும் வேகமாக பரவி இன்று நாட்டில் சுமார் 30 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனை கற்றுணர்ந்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் சுமார் 80 சதவீதமானோர் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களாகவும், நாட்டிலுள்ள நிலையான தொலைபேசி பாவனையாளர்களில் சுமார் 85வீதமானோர் இன்ரநெட் வசதியுடன் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிராமம், நகரம் என்றில்லாமல் நாட்டின் சகல ஏறைக்குறைய அனைத்துப் பாடசாலைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தின் அறிவை புகட்டும் வகையில் கணினிகள் வழங்கப்பட்டு நவீன உலகின் சவால்களை எதிர்வு கொள்ளத்தக்கதான முறையில் கல்வி முறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமை இலங்கையின் தகவல் தொழில் நுட்பத்தின் மேம்பட்ட நிலையைக் காட்டுகின்றது என்றே கூறலாம்.
எதிர்காலத்தில் இன்னும் விரிவடைந்து செல்ல பாடசாலைக் கலைத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு சகல மாணவர்களுக்கும் கணனி அறிவை போதிக்கும் திட்டத்திற்கு அமைய மடி கணனிகள் வழங்கப்படுமனால் கற்றல் கற்பித்தலில் நவீனத்துவமான நிலையை அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

0 comments:
Post a Comment