Wednesday, November 16, 2011

பிரதேசசபை உறுப்பினரின் பணம் அபேஷ்


(கலாநெஞ்சன்)  
ஜா-எல பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட்7,500 ரூபா ரொக்கப் பிணையிலும். 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சம்பவதினம் பிரதேசசபை உறுப்பினர் தங்க நகைகளை அடகு வைத்து 8 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளார். நண்பர்களிடமும், அன்றையதினம் மூன்று இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார். இந்தப் பணத்துடன் பிரதேசசபை உறுப்பினர் ஜா-எல உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதியொன்றுக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார். இரவு 9.30 மணியளவில் அவர் வீடு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறும்போது இரண்டு நபர்கள் அவரது முகத்தை பல தடவைகள் தாக்கி விட்டு பிரதேச சபை உறுப்பினரிடமிருந்த 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என்று வழக்கின் முறைப்பாட்டாளரான பிரதேச சபை உறுப்பினர் ஜா–எல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

0 comments:

Post a Comment