(பஹமுன அஸாம்)
இலங்கை தொடர்பான மற்றுமொரு காணொளியை சனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் இரு வாரங் களுக்குள் வெளியிட வுள்ளதாக பிரித்தானியா வின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த காணொளியானது போர் முறைகேடுகள் இடம்பெற்றதை வெளிக்காட்டும் விதத்திலேயே அமையவுள்ளது.
ஏற்கனவே போலியான வீடியோக் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதனால் பிரித்தானியாவின் இலங்கைத் தூதரகம் அதுபற்றி ஆராய்ந்து வருகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் வெளிவரவுள்ளமையால் மக்கள் அதன்மீது செலுத்தும் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பிரித்தானியா இத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றதென பிரித்தானியாவின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment