(எஸ்.எல்.மன்சூர்)
அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையின் அனுசரனையில் அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் மொழி உரிமைகள் பற்றிய கருத்தரங்கு அரச ஊழியர்களுக்காக தற்போது நடைபெற்று வருகிறது. மொழிய உரிமைகளின் செல்வாக்கு, பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டில் சகோதர மொழிகளின் ஊடுறுவல் போன்ற பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்படும்.
நாட்டின் மொழிப்பிரச்சினை இனப்பிரச்சினையாக தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றை மாற்றியமைத்து எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்பதை பறைசாற்றும் இதுபோன்ற கருத்தரங்குகளின் ஊடாக விடயங்கள் சகலருக்கும் சென்றடைவதற்கும், மொழி உரிமைகள் பற்றிய எண்ணப் பதிவை ஏற்படுத்துவதற்கும் இக்கருத்தரங்கு நல்ல பலனைத் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று கலந்து கொள்ளவுள்ள அரச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment