Monday, November 14, 2011

யாழில் வாக்காளர் அட்டை கலந்துரையாடல்


(பஹமுன அஸாம்)  
வடபகுதி மக்களுக்கு கடந்த காலங்களில் வாக்களிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் கறீன்கிராப் ஹோட்டலில் நடைபெறுகிறது.

பஃரல் அமைப்புக்கும் தேர்தல் ஆணையகத்துக்கும் இடையில் நடைபெறவுள்ள மேற்படி சந்திப்பில் வாக்காளர்களைப் பதிவில் ஏற்படும் பிரச்சினைகள், அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் உட்பட மேலும் பல விடயங்கள் இந்நிகழ்வில் ஆராயப்படும்.

வட மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் இணைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை பிரதான உறுப்பினர்கள், தேர்தல் அதிகாரிகள் என பல இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment