Monday, November 28, 2011

இலங்கையில் 8 ஆசனம் கொண்ட ஆட்டோ


எட்டு ஆசனங்களைக் கொண்ட முச்சக்கர வண்டியை இலங்கை சந்தைக்கு சீனாவின் AAJ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இடவசதி மற்றும் ஏனைய சிறப்பம்சம் காரணமாக, உள்ளுர் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்குமென இதனை சந்தைப்படுத்துவோர் தெரிவித்துள்ளனர்.

250 CC கனவளவுள்ள என்ஜினையும் 13 லீற்றர் பெற்றோலை நிரப்பக்கூடிய பெற்றோல் தாங்கியையும் இது கொண்டுள்ளது. 400 கிலோ மீற்றர் தூரத்திற்கு தொடர்ச்சியாக இதில் பயணம் செய்யமுடியும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்புறங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என அக்கம்பனியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன் உதிரிப் பாகங்களை பரவலாக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment