(எம்.எம். ஜெஸ்மி௦ன்)
எல்லை நிர்ணயக்குழுவின் ஒன்றுகூடல் இன்று திங்கட்கிழமை அம்பாறை கச்சேரியில் நடைபெற்றது. இதில் அம்பாறை தமிழ்பேசும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேசசெயலகர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், மக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில் ரவூப் ஹக்கீமின் பிரதிநிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொதுச்செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் கலந்துகொண்டு எல்லை நிர்ணயம் பற்றி கலந்தகொண்டவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சம்மாந்துறை பிரதேச செயலாளர் நெளசாத், அக்கரைப்பற்று மாநகரசபை தவிசாளர் சக்கி அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தமிழ் பிரதேச நிர்வாகிகள், பள்ளிவாசல் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டு சட்டப்பிரச்சினைகளை எடுத்து விளக்கினர். இப்பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துப் பேசவுள்ளதாக நிஸாம் காரியப்பர் எமக்குத் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment