(பஹமுன அஸாம்)
சட்டவிரோதமான முறையில் சந்தைப் படுத்துவதற்காக தாயர்செய்து வைத்திருந்த 86,386 கிலோ தேயிலையையும் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இத்தேயிலைகள் தரக்குறைவானது எனவும் அவை பாவனைக்கு உகந்தவையல்ல எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விஷேடப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி கொடுகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையிலே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தேயிலை விநியோகத்திற்காக தயார் செய்யப்பட்டிருந்த ஆவணங்கள், அதனுடன் தொடர்படைய 28 இறப்பர் முத்திரைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment