ஜெனிலியா-ரிதேஷ் தேஷ்முக் திருமணம் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் வெற்றி பெற்றவர் நடிகை ஜெனிலியா. தமிழில் விஜய், ஜெயம் ரவி, உள்ளிட்ட முன்னணி கதாநாயகன்களோடு நடித்தவர். தற்பொழுது இவர் நடித்திருக்கும் வேலாயுதம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பாலிவுட்டிலும் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. இவரும் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் சேர்ந்து நடித்த முதல் படமான துஜே மேரி கஸம் 2003இல் வெளியானது. அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வந்தனர்.
தொடர்ந்து காதலித்து வந்த இவர்களுக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டும் அழைக்க இரு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:
Post a Comment