Tuesday, November 15, 2011

சிறுபான்மையினரின் உரிமைகள் கட்டாயம்


(எஸ்.எல்.மன்சூர்)  
சிறுபான்மையினரின் மொழி உரிமைகளை உறுத்திப்படுத்தி, வலுவூட்டுதலே இன்றைய சமாதான இலங்கையைக் கட்டியெழுப்ப உதவுமென்று இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறையில் நடைபெற்ற அரச ஊழியர்களுக்கான மொழி உரிமை பற்றிய கருத்தரங்கில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்தார். அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையின் (NAFSO) அனுசரணையுடன் அம்பாறை மொண்டி உல்லாச விடுதியில் நடைபெற்ற கருத்தரங்கில் விரிவுரையாற்றுகையில் தெரிவித்தார.

நாட்டில் வாழும் மூவின மக்களும் பேசுகின்ற தமிழ், சிங்கள மொழிகளை அரசியல் யாப்பின்படி அமுல்படுத்துகின்றபோது பிரச்சினைகள் எழுவதற்கு இடமே இல்லை. சட்டத்தில் மொழி உரிமைகளை அமுல்படுத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் சில தடைகள் காரணமாக உரிய முறையில் அமுல்படுத்துவதிலிருந்து விலகி வருகின்றது. எனவேதான் இவ்வாறான கருத்தரங்குள் ஊடாக அரச அதிகாரிகள் தங்களை நாடி வருகின்ற மக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றவேண்டிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது. இதனை நிவர்த்திப்பதில் உறுதுணையாக இருக்க வேண்டிய கட்டாயம் அரச ஊழியர்களுக்குண்டு. கிராம மட்டத்தில் மொழிச் சங்களை ஆரம்பித்து அதனூடாக பிரச்சினைகளை மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் கொண்டு சென்று தீர்வுகாண்பதே நோக்காகும். 

எனவேதான். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் பலதரப்பட்டவர்களால் மொழி உரிமைகள் மீறப்பட்டு வந்திருக்கின்றன. மொழியுரிமைகளின் செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றை ஒவ்வொரு அரச ஊழியரும் அறிந்து நடந்து கொள்வதுடன் பிரச்சினைகளை தோற்றுவிக்காது சமாதாக இலங்கையைக் கட்டியெழுப்ப நாம் ஒவ்வொருவரும் திடசங்கட்பம் பூணுவோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மொழி உரிமைகள் கற்கை நெறியின் விரிவுரையாளர் கலாநிதி சைப்தீன் மொழி உரிமைகள் பற்றியும் விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் “மொழியும் மனித நேயமும்" நூலும் விநியோகிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட மீனவர் அமைப்பின் இணைப்பாளர் திருமதி சாஹிறா தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.






0 comments:

Post a Comment