Sunday, November 06, 2011

உயர்தரப் பரீட்சை முடிவுகள் விரைவில்


கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். புதிய மற்றும் பழைய பாட விதானங்களுக்கு அமையவே பெறுபேறுகள் வெளியிடப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையின் போது தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு இலங்கை பூராகவும் இருந்து 2இலட்சத்து 94ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment