Tuesday, November 01, 2011

நுளம்புகளால் அரசுக்கு பெரும் வருமானம்


இலங்கையில் நுளம்பு பெருகும் இடங்கள் பற்றி கவனயீனமாக இருந்த 12825 பேருக்கு எதிராக வழக்குத் தொடுத்து அதிலிருந்து 3 கோடியே 69 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாவை சுகாதார அமைச்சு தண்டப்பணமாகப் பெற்றுள்ளது. அண்மையில் சுகாதார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தன.

பரிசோதனையின்போது வீட்டில் நுளம்பு பெருகுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை சட்டப்பிரிவு 262ஆம் பிரிவின் பிரகாரம் மெஜிஸ்ரேட் நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்ய முடியும். இதன்மூலமாகவே இவ்வாறு பாரியளவிலான தண்டப்பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:

Post a Comment