இலங்கையில் கிழக்கு கடற்கரையில் உல்லே பகுதியில் வெளிநாட்டவர்கள் கடல் அலைகளுக்குள் உயிரை துச்சமென மதித்து சாகசம் புரிவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இது அதைவிட வித்தியாசமானது. இவர் 90 அடி நீளமான பயங்கர அலைக்குள் சறுக்கிவந்து உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனை போர்த்துக்கல் நாட்டில் Praia என்ற கடற்கரையில் Garrett என்பவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியத்தக்க விடயம் என்னவென்றால், அவர் சவாரி செய்யும் அவரது போர்ட்டிலேயே வீடியோ கமெராவை வைத்து அதன் மூலமாக தன்னை அற்புதமாக வீடியோ எடுத்திருக்கிறார். இது பற்றி Garrett பேசுகையில், "நான் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதனை நான் பெருமையாக நினைக்கிறேன். இங்கே அலைகள் போன்ற ஒரு மர்மம் இருக்கிறது. இந்த மர்மம் மிகவும் மோசமானது.
அந்தக் காணொளியை துருவம் வாசகர்ளுக்காக இங்கு தருகின்றோம்.




0 comments:
Post a Comment