Tuesday, November 29, 2011

காணிகள் சுவீகரிப்பு திட்டத்தில் சிக்கல்


தமிழ் தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரியும் பெருந்தோட்டங்களின் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மீதும் அருகில் வசிக்கும் கிராமத்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. தோட்டத்தொழிலாளர்களும் அருகில் வசிக்கும் சிங்கள கிராமவாசிகளும் பெருந்தோட்டங்களின் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமித்து வருவதாக தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

இது தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம், தோட்ட நிறுவனங்கள நேற்றுமுன்தினம் முறையிட்டுள்ளன. இதேவேளை அரசாங்கம் நாடாளுமன்றில் நிறைவேற்றியுள்ள காணி சுவீகரிப்பு சட்டத்தின்படி பெருந்தோட்டங்களின் 37 ஆயிரம் ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்படவுள்ளது

இதன்போது  அந்த காணிகள் ஏனையோருக்கு வழங்கப்படும் முன்னர் தமக்கும் அதில் பங்குவேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான ஒரு பிரச்சினை தாழ்நிலை தேயிலை உற்பத்தி இடமான மாத்தறை தெனியாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனியாருக்கு காணிகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்படும் முயற்சியை அந்த தொழிலாளர்கள் எதிர்த்துள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட முறுகலை பொலிஸார் பின்னர் தீர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment