இந்திய வம்சாவளியான கத்தோலிக்க ஒருவர் கைதுசெய்யப்பட்டமைக்கு, இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தமது அதிருப்தியை வெளியிட் டுள்ளது. மொறட்டுவ ராவத்தாவத்த பகுதியில் அருட் சகோதரி, மேரி எலிசாவினால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக கூறி, அருட் சகோதரரி மேரி எலிசா கைதுசெய்யப்பட்டார்
பின்னர் அவர் கடும் நிபந்தனைகளுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அருட் சகோதரியின் வெளிநாட்டு பயணத்துக்கும் நீதிமன்றம் தடை விதித்து. அத்துடன் சகோதரி, சிறுவர் இல்ல பிரதேசத்துக்கு செல்லவும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்தநிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கத்தோலிக்க திருச்சபை, அன்னை தெரேசாவின் ஆசிப்பெற்ற தர்ம ஸ்தாபனத்தை அருட்சகோதரிகள் இணைந்து மொறட்டுவ பகுதியில் நடத்தி வருகின்றனர். எனினும் அருட் சகோதரிகளுக்கு எவ்வித மரியாதையும் வழங்கப்படாது, இந்த கைது இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இந்திய சகோதரியை அவரது சட்டத்தரணி சந்திக்ககூட அனுமதி வழங்கப்படவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட சகோதரியின் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை என்பதை இலங்கையின் பொலிஸாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும், சிறுவர்களை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் அருட்சகோதரியின் கைது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment